Product Description
நேற்றைய காற்று | NETRAIYA KAATRU
நேற்றைய காற்று | NETRAIYA KAATRU
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய கட்டுரை நூல் இது. தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு. பாடலைக் கேட்டுவிட்டு கடந்துசெல்லும் பலருக்கு அதை எழுதிய பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், பாடல்துறையில் ஆர்வமுள்ள அனைவரையும் கருதிற்கொண்டு எழுதப்பட்டுள்ளது. அச்சுப் பதிப்பில் பரவலான வரவேற்பைப் பெற்ற இந்நூல் மின்னூலாகவும் வருகிறது. யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்
