Product Description
நத்தையின் பாதை | NATHTHAIYIN PAADHAI
நத்தையின் பாதை | NATHTHAIYIN PAADHAI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
NATHTHAIYIN PAADHAI - இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில், அரசியலில் பங்கெடுக்க முடிகிறது.
அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன. பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை, சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன. இலக்கியம் எழுதுவது, வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை
