1
/
of
1
Product Description
நான் மலாலா | NAAN MALALA
நான் மலாலா | NAAN MALALA
Author - மலாலா யூசுஃப்ஸை (MALALA YOUSAFZAI)
Publisher - KALACHUVADU
Language - TAMIL
Regular price
Rs. 395.00
Regular price
Sale price
Rs. 395.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள். வாய்மூடி அமைதியாக இருக்க மறுத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினாள். 2012 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி செவ்வாயன்று இப்போராட்டத்திற்குக் கடுமையான பின்விளைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது அவள் பயணித்த பேருந்திலேயே தாலிபான் ஒருவன், மிக அருகிலிருந்து அவள் தலையில் சுட்டான். அவள் பிழைப்பாள் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் அதிசயமாக உயிர்தப்பி, வட பாகிஸ்தானின் பள்ளத்தாக்கில் ஒரு பின்தங்கிய கிராமத்திலிருந்து ஐநா சபைவரை அவள் பயணம் செய்திருக்கிறாள். பதினாறு வயதிலேயே அமைதியான எதிர்ப்பிற்கு உலகச் சின்னமாய் குறிப்பிடப்படுகிறாள். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறாள். பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தின் உருக்கமான கதைதான் ‘நான் மலாலா’. ஆண் குழந்தைகளே குடும்பச் சொத்து என்று கருதும் சமூத்தில் தன் பெண் குழந்தைமேல் அபரிமித அன்பு கொண்ட பெற்றோரின் கதை. பெண் கல்விக்கான போராட்டத்தின் கதை. இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு குரலின் சக்தி போதும் என்று இந்நூல் நம்மை நம்பவைக்கும்.
View full details
