Product Description
முனியாண்டி விலாஸ் | MUNIYANDI VILAS
முனியாண்டி விலாஸ் | MUNIYANDI VILAS
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
ஒரு கவிதை தன்னை எப்படி எழுதிக்கொள்கிறது என்பதை யோசிக்க பிரமிப்பாக இருக்கிறது.
அந்தக் கவிதை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கருவியாக ஒருவனை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதும் ஆச்சர்யமே.
ஒரு கவிதை, தன்னை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்திக்கொள்கிறது. மனிதனைப் போல அதனிடம் எந்த மறைவுமில்லை. மனிதனைப் போல அதனிடம் எந்த பேதமுமில்லை. தன்னை எப்படியாவது நிலைநிறுத்திக்கொள்ள அதுபடும் பாடும் பரிதவிப்பும் சொல்லில் அடங்காதவை. யுகபாரதியின் கவிதைகள் சீரான வேகத்துடன் தெளிந்த நீர்போல நடப்பவை,பரபரப்பான திரைப்பாடல்களுக்கு மத்தியிலும் தன்னுடைய அசலான முகத்தை இழக்காதவை.
முனியாண்டி விலாஸ் என்னும் தலைப்பில் வெளிவரும் இத்தொகுப்பு, உலகமயமாக்கலுக்குப் பின் ஒரு சமூகம் தன்னை எத்தகைய நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விவரிக்கிறது. இழந்துவிட்ட தன்னுடைய விழுமியங்களை, இழந்துவிட்ட தன்னுடைய மதிப்பீடுகளைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது.
