Skip to product information
1 of 1

Product Description

மிளகு | MILAGU

மிளகு | MILAGU

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 170.00
Regular price Sale price Rs. 170.00
Sale Sold out

Low stock

கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா.

மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் திணையின் இயற்கை சாட்சியான ஓர் இளம்வாழ்வும் அதன் பாடுகளும், விட்டு வெளியேறுதலின் மூட்டமான திகைப்பும் நகங்கடித்தலும், பின் திரும்பிப்பார்க்கையில் பறிகொடுப்பதன் அரசியல் பிரக்ஞையும் பதட்டமும் ஆங்காரமும் என மலையைப் போலவே கரடுமுரடான, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, சமகாலமும் கடந்தகாலமும் முயங்கும் ஒரு நீண்ட நாடகத்தை, கவிதைகளின் வழியே உருவாக்குகிறார்.

எலும்பும் தோலுமான மதிப்பீடுகள், நுகர்வு வெறி, பருவநிலை மாற்றம், நியான் விளக்குகளின் பெருக்கம் என்றாகிவிட்ட காலத்தில், ஒரு திக்குவாய் சிறுமியைப் போல நாம் மறந்ததையும் இழந்ததையும் நினைவூட்டி, நமக்கும் மலைக்கும் ஏன் நமக்கும் நமக்குமே கூட எவ்வளவு தொலைவு பாருங்கள் என்கின்றன இக்கவிதைகள்.

- வே. நி சூர்யா

View full details