Product Description
மகிழ்ச்சியாக இருபதற்கான துணிச்சல் । MAGIZHCHIYAGA IRUPATHARGANA THUNICHAL
மகிழ்ச்சியாக இருபதற்கான துணிச்சல் । MAGIZHCHIYAGA IRUPATHARGANA THUNICHAL
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த 'விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.
‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று இதில் வருகின்ற தத்துவஞானி நம்புகிறார். ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, வெறுமனே உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி பொறுமையாக, அட்லருடைய "துணிச்சலின் உளவியலின்” சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைக்கிறார். இது உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்ற ஓர் படைப்பாகும். இது அனைத்து விதமான பின்புலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
