Product Description
மாபெரும் ரகசியம் । MAAPERUM RAGASIYAM
மாபெரும் ரகசியம் । MAAPERUM RAGASIYAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ஞானத்தைத் தேடிச் செல்லும்படி ஏதோ ஒன்று அவருக்குள்ளிருந்து அவரை உந்தித் தள்ளியது. அவர் அந்தத் தேடலில் பதினான்கு ஆண்டுகளைச் செலவிட்டதன் விளைவாகக் கண்டுபிடித்த உலகளாவிய உண்மைகள் இந்நூலின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
மாபெரும் இரகசியம் மக்களை பௌதிக உலகிலிருந்து உயர்த்தி, அனைத்துச் சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ள ஆன்மிகத் தளத்திற்குக் கூட்டிச் செல்லும். இந்நூலில் இடம்பெற்றுள்ள போதனைகள், நீங்கள் உடனடியாக நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய சில பயிற்சிகளை வழங்குவதோடு, உங்களுடைய பயங்கள், ஐயப்பாடு, கவலை, வேதனை ஆகியவற்றைக் கரைக்கக்கூடிய ஆழமான உண்மைகளையும் வழங்குகின்றன. உலகம் நெடுகிலுமுள்ள பல்வேறு ஆன்மிக ஆசான்கள் உதிர்த்த ஞான முத்துகளால் நிரம்பி வழிகின்ற மாபெரும் இரகசியம், துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டி, ஒரு பேரானந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு நேரடியான பாதையை வாசகர்களுக்கு வழங்குகிறது.
