Product Description
கொட்டுமேளம் | KOTTU MELAM
கொட்டுமேளம் | KOTTU MELAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
முதல் தொகுப்பிலேயே பிரமிக்கவைத்த படைப்பாளிகளில் தி. ஜானகிராமனுக்குத் தனி இடம் உண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுக் காலப் படைப்புப் பயணத்தில் அவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்தாலும் அந்தச் சாதனைகளின் வெளிச்சமோ காலத்தின் ஓட்டமோ அவருடைய முதல் தொகுப்பை எந்த வகையிலும் மங்கச் செய்துவிடவில்லை. சரளமான கதையோட்டம், இயல்பானதும் சுவையானதுமான உரையாடல்கள், நேர்த்தியான பாத்திர வார்ப்புகள், வாழ்வின் மகத்தான தருணங்களை இயல்பாக வெளிப்படுத்தும் படைப்பாக்கம், வாழ்வின்மீதும் மனிதர்கள்மீதுமான தீராத வியப்பை வெளிப்படுத்தும் தொனி, யார்மீதும் எதன் மீதும் தீர்ப்பெழுதாத பக்குவம் முதலான சிறப்புக் கூறுகள் அனைத்தும் அவருக்கு எடுத்த எடுப்பிலேயே வசப்பட்டுவிட்டதை அவருடைய முதல் தொகுப்பு காட்டுகிறது. முதல் தொகுப்பிலேயே சிறுகதைக் கலை அவருக்கு முழுமையாக வசப்பட்டிருந்ததற்கான சான்றாகவும் இது திகழ்கிறது.
