Product Description
கூட்டு விளைவு | KOOTTU VILAIVU
கூட்டு விளைவு | KOOTTU VILAIVU
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது.மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு.
உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது குறித்து நீங்கள் தீவிரமாக இருந்தால், கூட்டு விளைவின் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புகின்ற வெற்றியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இன்றே உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள்.
