Product Description
காஃப்கா – கடற்கரையில் | KAFKA KADARKARAIYIL
காஃப்கா – கடற்கரையில் | KAFKA KADARKARAIYIL
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓர் நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.
முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.
இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடககிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.
