Product Description
இடம் பொருள் இசை | IDAM PORUL ISAI
இடம் பொருள் இசை | IDAM PORUL ISAI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
சொற்களைப் பிளக்கத் தெரிந்தவன் எவனோ, அவனே சந்தேகத்தையும் அடித்து நொறுக்குவான் என்று கபீர்தாஸர் எழுதியிருக்கிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை கபீரின் கவிதைவரிக்கு விளக்கம் தருபவை.
ஒரு சொல், என்ன பொருளை தருகிறதென்பதை ஊகிப்பது சிரமமல்ல. பயிற்சியாலும் முயற்சிகளாலும் அதைக் கண்டைந்துவிடலாம். ஆனால், அச்சொல் எதன் பின்னணியிலிருந்து வருகிறதென்பதை அனுபவங்களே தருகின்றன.
அவ்வனுபவங்களின் இலக்கியச் சொல் ரசனையாகவும், ரசாயணச் சொல் அரசியலாகவும் தத்துவமாகவும் ஆகின்றன. திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பார்க்கும் முயற்சியை இக்கட்டுரைகளில் யுகபாரதி மேற்கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களுக்கும் இலக்கியங்களுக்கும் இடையே காலம் பலவாக இருந்துவரும் அரூபச் சுவர்களை இக்கட்டுரைகள் உடைத்திருக்கின்றன. வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள், யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை.
