Product Description
டயலாக் | DIALOGUE
டயலாக் | DIALOGUE
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள். போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், 'ஊர் உலகத்தில்தான் எத்தனை சுவாரஸ்யமான பேச்சுக்கள்... காதைத் தீட்டிக்கொண்டு, ஒட்டுக் கேட்டு, நறுக்கென்று எழுதி அனுப்புங்களேன்' என்று ஒரு போட்டி வைத்தோம். 'வித்தியாசமாக ஏதாவது வந்தால், இரண்டொரு இதழ்களுக்குப் பிரசுரிக்கலாம்' என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால், வாசக மகாசக்தி எழுதிக் குவித்த பேச்சுத் துணுக்குகள், நாங்களே அதுவரை அறிந்திராத முற்றிலும் புதுமையான ஒரு சுவையோடு அசத்தின. 'டயலாக்' என்று தலைப்பைக் கொடுத்து, இதழ்கணக்கில் எங்களையும் அறியாமல், அவற்றைத் தொடர்ந்து பிரசுரிக்க ஆரம்பித்தோம். மாதங்கள்... ஏன், வருடங்கள் பல உருண்டோடியபோதும், வாசகர்களிடமிருந்து 'டயலாக்'குகள் வருவது கூடியதே தவிர... குறையவில்லை!
