பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை கொண்ட அவள் ஏன் தனித்து வசிக்கிறாள்?
ஒரு நவீன வாழ்க்கையில் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறாள் ஒரு பழைய அம்மா. அப்படி ஒருத்தி இல்லை என்று நினைக்க முயலும் ஒரு வாழ்க்கைமுறையின் உடைந்தும் உடையாமலும் இருக்கும் சில சின்னஞ்சிறு பகுதிகளே இந்த நாவல். சிங்கப்பூரை களமாக கொண்ட இந்த கதை பெருநகரங்களின் உலர்ந்த உறவுகளை அடையாளம் காண்கிறது.